ஆபாச வீடியோ விவகாரம்: பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் பதவி விலகல்

 
kt ragavan

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கேடி ராகவன் அவர்களின் ஆபாச வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கேடி ராகவன் அவர்கள் ஆபாச வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் இன்று காலை அவர் ஆலோசனை செய்தார். அதன் பிறகு அவர் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கே.டி.ராகவன் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் முப்பது வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்று பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்தது என்பதை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் கலங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும். என்று குறிப்பிட்டுள்ளார் 

கே டி ராகவன் பதிவு செய்துள்ள இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web