பொங்கல் பண்டிகைக்காக எத்தனை சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் தகவல்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின்போது சென்னையில் பணிபுரியும் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜனவரி 12 முதல் ஜனவரி 14 வரை
 
பொங்கல் பண்டிகைக்காக எத்தனை சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் தகவல்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின்போது சென்னையில் பணிபுரியும் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது

இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 12 முதல் ஜனவரி 14 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

From around the web