ரஜினியை எதிர்த்தால் மட்டுமே தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும்: பொன் ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் மட்டுமின்றி பலரும் அரசியல்வாதிகளை தாக்கி பேசினர். குறிப்பாக ரஜினிகாந்தை விட அதிகமாக அதிமுகவையும் மற்ற கட்சியையும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தாக்கிப் பேசினார். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணை முதல்வரை ’நீங்கள் ஆம்பளையா’ என்று கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது ஆனால் இதற்கெல்லாம் பொங்காத அரசியல்வாதிகள் ரஜினியை மட்டும் எதிர்த்து பொங்கி வருகின்றனர். இதற்கு காரணம் ரஜினியை எதிர்த்து பேசினால் மட்டுமே தமிழகத்தில் தங்களுடைய பெயர் தலைப்பு
 
ரஜினியை எதிர்த்தால் மட்டுமே தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும்:  பொன் ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் மட்டுமின்றி பலரும் அரசியல்வாதிகளை தாக்கி பேசினர். குறிப்பாக ரஜினிகாந்தை விட அதிகமாக அதிமுகவையும் மற்ற கட்சியையும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தாக்கிப் பேசினார். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணை முதல்வரை ’நீங்கள் ஆம்பளையா’ என்று கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது

ஆனால் இதற்கெல்லாம் பொங்காத அரசியல்வாதிகள் ரஜினியை மட்டும் எதிர்த்து பொங்கி வருகின்றனர். இதற்கு காரணம் ரஜினியை எதிர்த்து பேசினால் மட்டுமே தமிழகத்தில் தங்களுடைய பெயர் தலைப்பு செய்திகளில் வரும் என்பதே ஆகும்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் ’தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் ரஜினியை எதிர்த்து பேச வேண்டும் என்றும் ரஜினியை எதிர்த்துப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதாக சிலர் நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரின் இந்த கருத்து 100% உண்மை என சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web