மீண்டும் அரசியல்: தமிழருவி மணியன் அதிரடி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கூறியவுடன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் தனது காந்திய மக்கள் இயக்கத்தையும் அவர் கலைத்து விடுவார் என்று எண்ணப்பட்டது
இந்த நிலையில் இன்று கோவை கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் காந்திய மக்கள் இயக்கத்தினர் தமிழருவி மணியன் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் தமிழருவி மணியன் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 38 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் தான் மீண்டும் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஜினி மக்கள் மன்றத்துடன் தனது காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்
இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றம் மற்றும் காந்திய மக்கள் இயக்கம் இணைந்தவுடன் இரண்டு சேர்ந்த அமைப்பு தமிழருவி மணியன் தலைமையில் கீழ் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்