ஓட்டலில் லத்தி தாக்குதல் செய்த போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்!

 
ஓட்டலில் லத்தி தாக்குதல் செய்த போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்!

கோவை ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை லத்தியால் அடித்த சப் இன்ஸ்பெக்டர் முத்து என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

நேற்று முன்தினம் கோவை காந்திபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதில் சில பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அங்கு வந்த போலீஸ் எஸ்ஐ முத்து என்பவர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களை சரமாரியாக அடித்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக காவல் துறை தெரிவித்திருந்தது

hotel

இந்த நிலையில் மனித உரிமை ஆணையம் உள்பட பல்வேறு தரப்பினர் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்ததோடு, அப்பாவி பொதுமக்களை அடித்த எஸ்.ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது

இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின் படி எஸ்.ஐ. முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் லத்தியால் அடித்த எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது மற்ற போலீஸ்காரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web