விவேக் இறுதி ஊர்வலத்தில் காவல்துறை மரியாதை: தமிழக அரசு அரசாணை!

 
விவேக் இறுதி ஊர்வலத்தில் காவல்துறை மரியாதை: தமிழக அரசு அரசாணை!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் இறுதி ஊர்வலம் காவல்துறை மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவரும், தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ்பெற்றவரும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகள் பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்த விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாரின் கலை மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக அன்னாரின் இறுதிச் சடங்குகளின் போது காவல்துறையை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web