வெளியானது பிளஸ் 2 முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்ப்பது?

 
result

தமிழகத்தில் சற்றுமுன் பிளஸ் 2 முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பிளஸ்டூ முடிவுகளை பார்த்து வருகின்றனர்

தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் மாணவர்கள் கல்லூரி படிப்பிற்கு மதிப்பெண் பட்டியல் தேவை என்பதால் இன்று மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்த தேர்வு முடிவுகளையும் மதிப்பெண் சான்றிதழையும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை கீழ்கண்ட இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது


www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dg2.tn.nic.in
www.dge.tn.gov.in

From around the web