தடுப்பூசி போட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு? தமிழக அரசு முக்கிய முடிவா?

 
exam

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது 

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியது. அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்று தயார் செய்து சற்றுமுன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சமர்ப்பித்துள்ளார் 

இந்த அறிக்கையின் அடிப்படையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்ட பிறகு தேர்வை நடத்தலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பாதுகாப்புடன் பிளஸ் 2 தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்றும் செய்திகள் கசிந்து வருகின்றன.

From around the web