21 மாவட்டங்களில் சதம்: விண்ணை முட்டும் பெட்ரோல் விலை!

 
petrol

தமிழகத்தில் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்றும் இன்றும் கூட சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் மொத்தம் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதத்தை அடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ நெருங்கிவிட்ட நிலையில் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.50க்கு விற்பனையாகிறது

மதுரை, காஞ்சிபுரம், சிவகங்கை, அரியலூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விட்டது என்பதும் கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.101ஐ கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்னும் 51 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தால் 100ஐ தொட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருப்பது வாகன ஓட்டிகளே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

From around the web