தமிழகத்தில் ரூ.101ஐ தாண்டியது பெட்ரோல் விலை!

 
petrol

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை 30 காசுகள் லிட்டருக்கு உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.49 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசுகள் உயர்ந்ததை அடுத்து 93.46 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 23 மாவட்டங்களில் பெட்ரோல் விலை  ரூ.100ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பாக கள்ளக்குறிச்சியில் பெட்ரோல் விலை ரூ.101ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை பல மாதங்களாக கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அரசு இனியாவது பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது

From around the web