சென்னையில் ரூ.101ஐ நெருங்கியது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிருப்தி!

 
petrol

சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது காரணமாக நேற்று சென்னையில் பெட்ரோல் விலை சதமடித்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ரூ.100ஐயும் தாண்டி பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் இன்று 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.75 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. ஆனால் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்ற காரணத்தால் நேற்றைய விலையான ரூபாய் 93.91 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டி 110ஐ நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் டீசல் விலை 100ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெற்று மத்திய அரசை தன் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வளர்ந்து வருகிறது.

From around the web