தடுப்பூசிக்கு பெட்ரோல் இலவசம்: அதிரடி அறிவிப்பு!

 
vaccine

தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தடுப்பு ஊசி செலுத்துவதற்கு பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்று குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி சங்கத்தின் சார்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இதனை பெறுவதற்காகவே பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி செய்து கொள்கின்றனர் என்று தனியார் ஓட்டுனர் பயிற்சி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

From around the web