பெட்ரோல் டீசல் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய விலை என்ன?

 
petrol

கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் டீசல் விலையில் மட்டும் ஒரு சில மாற்றம் இருந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த அறிவிப்பின்படி பெட்ரோல் விலை இன்று 15 காசுகள் குறைந்து உள்ளது. இதனை அடுத்து இன்றைய பெட்ரோல் விலை ரூ.99.32 என விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை இன்று 18 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து ரூ.93.66 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதை அடுத்தே எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விலைகளையும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரத்தில் தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியை குறைத்தது போல் மத்திய அரசும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web