மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: இன்றைய விலை என்ன?

 
petrol

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயையும், 101 ரூபாயையும் தாண்டிய நிலையில் தற்போது 102 ரூபாயை நெருங்கியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலையை சென்னையில் இன்று 30 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூபாய் 101.67 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து ரூ.94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலை 102 ரூபாயும் டீசல் விலை 95 ரூபாயையும் தாண்டிவிடக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்த விலை மாற்றம் என்று கூறப்பட்டாலும் மத்திய மாநில அரசுகள் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூபாய் 50 க்கு மேல் வரி இருப்பதால்தான் இந்த விலை ஏற்றம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன

From around the web