லிட்டர் ரூ.100: பெட்ரோலை அடுத்து டீசலும் நெருங்குகிறது!

 
petrol

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது என்பதும் குறிப்பாக 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பின் கிட்டத்தட்ட தினந்தோறும் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூ.100ஐ நெருங்கி விட்டது என்பதும் டீசல் விலையும் ரூ.90ஐ தாண்டி ரூ.100ஐ நெருங்கி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு ரூ.96.71 என சென்னையில் விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசலின் விலையும் ரூ.90.92 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. ஏற்கனவே பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கி விடும் என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதுதான் பொது மக்களை அதிர்ச்சிக்கு காரணம். சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்தலும், உடனடியாக மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

From around the web