பெரியார் சிலை உடைப்பு: ரஜினியை பிரச்சனையை திசை திருப்ப நாடகமா?

பெரியார்-ரஜினி பிரச்சனை கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனையில் ரஜினியை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். ரஜினிக்கு ஒருபக்கம் கண்டனங்கள் குவிந்து போதிலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிகிறது இந்த நிலையில் தங்களுடைய நடவடிக்கை எதிர்வினையாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியார் ஆதரவாளர்கள் விரைவில் பெரியார் சிலையை உடைத்து ஒரு நாடகத்தை ஏற்படுத்துவார்கள் என டுவிட்டர் பயனாளிகள் ஒரு சிலர் டுவிட்டுகளை
 
பெரியார் சிலை உடைப்பு: ரஜினியை பிரச்சனையை திசை திருப்ப நாடகமா?

பெரியார்-ரஜினி பிரச்சனை கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனையில் ரஜினியை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். ரஜினிக்கு ஒருபக்கம் கண்டனங்கள் குவிந்து போதிலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிகிறது

இந்த நிலையில் தங்களுடைய நடவடிக்கை எதிர்வினையாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியார் ஆதரவாளர்கள் விரைவில் பெரியார் சிலையை உடைத்து ஒரு நாடகத்தை ஏற்படுத்துவார்கள் என டுவிட்டர் பயனாளிகள் ஒரு சிலர் டுவிட்டுகளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே பதிவு செய்திருக்கிறார்கள்

அதேபோல் தற்போது செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை ஒன்று மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உடைக்கப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ரஜினி-பெரியார் பிரச்சனையை திசை திருப்பவே பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் பயனாளிகள் சந்தேகம் கொள்கின்றனர் இது உண்மையா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்

From around the web