மீண்டும் இ-பாஸ்: ஊரடங்கில் தளர்வால் இ-பாஸ் எடுக்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்!

 
epass

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதை அடுத்து மீண்டும் இ-பாஸ் இணையதளத்தில் இ-பாஸ் எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இன்று முதல் ஆட்டோ டாக்சி ஓட்ட அனுமதி உண்டு என்றும், அதுமட்டுமின்றி கணினி பழுது பார்ப்பவர்கள், இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்பவர்கள், வாகன பழுது பார்ப்போர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்டவர்கள் இ-பாஸ் எடுத்து தங்கள் பணிகளைச் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இதனை அடுத்து இ-பாஸ் எடுக்க பொதுமக்கள் மற்றும் பணி செய்யும் ஊழியர்கள் ஆர்வத்துடன் இணையதளத்தை செல்லுகின்றனர். இன்று காலை 6 மணி முதலே இ-பாஸ் எடுக்க ஒரே நேரத்தில் பலர் குவிந்ததை அடுத்து இ-பாஸ் இணையதளம் சில நிமிடங்கள் முடங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இருப்பினும் தற்போது இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதை அடுத்து பலர் ஆர்வத்துடன் இ-பாஸ் எடுத்து வருகின்றனர். இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இனிமேல் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி விடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

From around the web