இன்று முதல் வெளியே சென்றால் அபராதம்: சென்னை மக்கள் சுதாரித்து கொள்ளவும்!

 
இன்று முதல் வெளியே சென்றால் அபராதம்: சென்னை மக்கள் சுதாரித்து கொள்ளவும்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக விதிக்கப்பட்ட தடைகளை பலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் இதனால் ஊரட்ங்கின் நோக்கமே பாழ்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு வந்தது 

இதனை அடுத்து நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று முதல் எந்தவித காரணமும் இன்றி வெளியே வருபவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று காலை போலீசார் காரணம் இன்றி வெளியே வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள், மாஸ்க் இல்லாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்

lockdown

மேலும் மீண்டும் ஒரு முறை இதே தவறை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இதனால் இன்று முதல் மே 24-ந்தேதி வரை அதி முக்கிய காரணம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அவ்வாறு வெளியே வந்தாலும் வாகனத்தில் வெளியே வரவேண்டாம் என்றும் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பயன்படுத்தி வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

From around the web