ரஜினியை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவது ஏன்? பழ கருப்பையா

இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகள் யாருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் ரஜினி கூறுவது மக்களிடம் போய் சேர்ந்து விடுமோ என அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர் என்று பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா கூறியுள்ளார் திமுக அதிமுக உட்பட கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது அரசியலில் இருந்து விலகி உள்ளார். தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் ரஜினிகாந்த் பெரியார் விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பழ கருப்பையா கூறியதாவது ரஜினி எதைச் சொன்னாலும்
 
ரஜினியை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவது ஏன்? பழ கருப்பையா

இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகள் யாருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் ரஜினி கூறுவது மக்களிடம் போய் சேர்ந்து விடுமோ என அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர் என்று பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா கூறியுள்ளார்

திமுக அதிமுக உட்பட கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது அரசியலில் இருந்து விலகி உள்ளார். தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் ரஜினிகாந்த் பெரியார் விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பழ கருப்பையா கூறியதாவது

ரஜினி எதைச் சொன்னாலும் உடனே பாய்வது என்பது அரசியல்வாதிகள் அவரை பார்த்து பயப்படுவதை காண்பிக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கின்ற எந்த தலைவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு என்பது கிடையாது. ஆகவே ரஜினியின் கருத்து மக்களிடம் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். அதனால் ரஜினி எதை சொன்னாலும் எதிர்ப்பது என்று அரசியல்வாதிகள் கிளம்புவதாக எனக்கு தோன்றுகிறது. ரஜினி சொல்வது தவறாக இருந்தால் மக்கள் அதை புறந்தள்ளி விட்டு போவார்கள். அதுமட்டுமின்றி தவறான கருத்தை சொல்லிய ரஜினியையும் தவறாக நினைப்பார்கள் என்று பழ கருப்பையா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

From around the web