பணம் எடுத்தால் கட்டணம்: நாளை முதல் அமல்!

 
sbi

எஸ்பிஐ வங்கிகளில் நாளை முதல் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏடிஎம்களில் அல்லது வங்கிகளில் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் மட்டுமே பணம் எடுக்க வேண்டும். அதற்கு மேல் பணம் எடுத்தால் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அதேபோல் பத்து பக்கங்களுக்கு மேற்கொண்ட காசோலைப் புத்தகத்தை தவிர்த்து வேறு புத்தகங்கள் வாங்கினால் ரூபாய் 40 கட்டணம் என்றும் அது மட்டுமின்றி அதற்குரிய ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த கட்டண முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பதால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை முழுவதுமாக நான்கு முறைகளில் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லை எனில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web