பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் காவல் நிலையத்தில் ஆஜர்: தீவிர விசாரணை!

 
padma seshadhthri

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததை அடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனை அடுத்து மேலும் சில ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வரிடம் விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் சற்று முன் பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா தி நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார்

பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா அவர்களிடம் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக ராஜகோபால் மீது பல்வேறு புகார்கள் வந்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்த கேள்வி பள்ளி முதல்வரிடம் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web