பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்: ஒய்ஜி மகேந்திரன் கூறுவது என்ன?

 
yg

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி என்ற தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோது மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் துண்டுடன் ஆன்லைன் வகுப்பு நடத்த வருவார் என்றும் ஆபாசமாக பேசுவார் என்றும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பி கனிமொழி உள்பட பலர் குரல் கொடுத்துள்ளனர் 

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் பேட்டி அளித்த போது சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் மீது தவறு இருந்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 

yg

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். பத்மா சேஷாத்திரி பள்ளியை நானோ என்னுடைய மகளோ நடத்தவில்லை என்றும் தான் அந்த பள்ளியின் டிரஸ்டி மட்டும்தான் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த பள்ளியை தனது தம்பியும் அவருடைய மனைவியும் தான் நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகள் மீது பாலியல் தொழில் நடப்பதாக தகவல் வந்தவுடன் இது குறித்து விசாரணை செய்ய தான் பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

From around the web