பள்ளிகளை மூட உத்தரவு: என்ன காரணம்?

 
school

அங்கீகாரம் இல்லாத தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்க கல்வி இயக்குனர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி நூற்றுக்கணக்கில் இயங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து கடந்த ஆட்சியில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அதிரடியாக இது குறித்த உத்தரவு ஒன்று வெளிவந்துள்ளது 

அங்கீகாரம் இல்லாத தொடக்கப் பள்ளிகளையும் நடுநிலை பள்ளிகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்ட தொடக்கக்கல்வி இயக்குநர்ம் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கினால் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார கல்வி இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி இயக்குநர்கள் தான் பொறுப்பும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web