ஓபிஎஸ் வீட்டிற்கு திடீரென செல்லும் ஈபிஎஸ்: மீண்டும் பிரச்சனையா?

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அதிகாரபூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. 

இதனை ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 11 வழிகாட்டி குழுவின் 11 பேர் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவில் இருந்த முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு முடிவு கிடைத்தது 

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செல்ல இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது 

சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு முதல்வர் ஈபிஎஸ் சந்திக்கவிருப்பதை அடுத்து அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக தன்னை  அறிவித்த துணை முதல்வருக்கு நன்றி செலுத்தவே அவர் ஓபிஎஸ் இல்லத்திற்கு செல்வதாகவும் வேறு எதுவும் பிரச்சனை இல்லை என்றும் துணை முதல்வர் இல்லத்தில் அவர் விருந்து சாப்பிடுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
அதிமுகவில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி விட்டது என்றும் இனி அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதே குறிக்கோள் என்றும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்  

From around the web