பொங்கல் தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் ஓபிஎஸ்: பிரதமர் வாழ்த்து

 

இன்று தமிழக மக்கள் மிக விமரிசையாக பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் இன்று தான் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது 

ஒரே நாளில் பொங்கல் மற்றும் பிறந்தநாள் ஆகிய இரண்டையும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வரும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது தமிழக கவர்னர், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆகியோரும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஓபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

modi

அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி அவர்களும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் 

அந்த கடிதத்தில் இந்த நன்னாளில் மங்களமும் மகிழ்ச்சியும் வரும் ஆண்டுகளில் தினமும் வெளிப்படும் என்று பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

       

From around the web