விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி போராடிய முக ஸ்டாலின்

 

சமீபத்தில் மத்திய அரசு இயற்றிய வேளாண் மசோதாக்கள் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்தது. அது மட்டுமின்றி இந்த மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கப்பட்டது என்பதும், இந்த மசோதாக்கள் அரசு இதழிலும் வெளியாகி விட்டது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்

காஞ்சிபுரம் அருகே திடீரென முக ஸ்டாலின் வயலில் இறங்கி வேலை மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவ்வப்போது வயலில் இறங்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் நிலையில் பதிலடியாக முக ஸ்டாலின் அவர்களும் வயலில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ள்ஆர்

காஞ்சிபுரத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைநகரில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web