அதிமுகவில் நடிப்பவர்களுக்கே வாய்ப்பு: திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பேட்டி

 
அதிமுகவில் நடிப்பவர்களுக்கே வாய்ப்பு: திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பேட்டி

அதிமுகவில் நடிப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்று திமுகவில் இன்று இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஒருவர் பேட்டி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் என்பவர் இன்று மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்

muthuramalingam

அவரை வாழ்த்தி வரவேற்ற ஸ்டாலின் அவருக்கு திமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் அதிமுகவில் நடிப்பவர்களுக்கு வாய்ப்பு என்றும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக தொழிற்சாலை போல் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். அதிமுகவில் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு, மதிப்பு கிடையாது என்றும் நடிப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web