மாணவர்களுக்கு தேர்ச்சி மட்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு!

 
students

பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி மட்டும் இருக்கும் என்று கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை எடுத்த முடிவின்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண் போடாமல் தேர்ச்சி என்று மட்டும் பொதுவாக பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த மதிப்பெண் பட்டியலில் மாணவரின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும் என்றும் ஐந்து பாடங்களுக்கு உரிய மதிப்பெண் மட்டும் இல்லாமல் மொத்தத்தில் தேர்ச்சி என்று மட்டும் பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து மாதிரி மதிப்பெண் பட்டியலை தயார் செய்து அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருப்பதாகவும் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 

From around the web