ஆக்சிஜன் படுக்கையை ஆன்லைனில் புக் செய்யும் வசதி: தமிழக அரசு அறிவிப்பு

 
ஆக்சிஜன் படுக்கையை ஆன்லைனில் புக் செய்யும் வசதி: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் மருத்துவமனை முன்பு மணிக்கணக்கில் காத்து இருப்பதாகவும் ஆக்சிஜன் கூடிய படுக்கை கிடைக்காத காரணத்தினால் மருத்துவமனை முன்பு பல ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் மருத்துவமனை முன் காத்திருக்காமல் ஆன்லைனிலேயே ஆக்சிஜனுடன் கூடிய படுக்கையை முன்பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. https://ucc.uhcitp.in/publicbedrequest என்ற இணையதளத்திற்கு சென்று அந்த இணையதளத்தில் நோயாளியின் பெயர், வயது, மற்றும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை அல்லது சாதாரண படுக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம்

bed

அதன்பின் அந்த மருத்துவமனைக்கு சென்று படுக்கையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி காரணமாக மருத்துவமனைகளில் மணிக்கணக்கில் ஆம்புலன்சில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web