ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

 
supreme court

ஒரே நாடு ஒரே ரேசன் என்ற திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தியது. இந்த திட்டத்தை பல மாநிலங்களில் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் தருவது பற்றி மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை திமுக எதிர்த்து வந்தது என்பதும், தற்போது ஆளும் கட்சியாக நிலையில் திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From around the web