கனமழையால் சென்னையில் ஒரு உயிர்ப்பலி!

 
rain dead

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 

குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது என்றும் ஒரு சில பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக நேற்று ஒரு உயிர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் உள்ள மில்லர்ஸ் ரோடு என்ற பகுதியில் அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புறத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து கிருஷ்ணய்யா என்பவர் பலியானார். இதனையடுத்து உடனடியாக வந்த மின்சார துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் 

மேலும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர். சென்னையில் பெய்த கன மழை காரணமாக மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web