ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸ்: வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்

 
village cooking

வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது என்பதும் தமிழில் ஒரு யூடியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் மற்றும் பெரியசாமி என்ற பெரியவர் என ஆறு பேரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில் விளையாட்டாக அவர்கள் கிராமப்புறத்தில் உள்ள வெளிப்புறத்தில் சமையல் செய்யும் வீடியோவை பதிவு செய்தனர். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானதை எடுத்து தொடர்ச்சியாக அவர்கள் சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் 

village cooking

இந்த நிலையில் தற்போது வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர்கள் கிடைத்துள்ளது என்றும் இதனை அடுத்து யூட்யூப்பில் இருந்து அவர்களுக்கு டைமண்ட் பட்டன் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நெட்டிசன்கள் இந்த சேனல் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த வில்லேஜ் குக்கிங் யூடியூப் நிர்வாகிகள் 6 பேரும் தங்களது சார்பில் ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web