சசிகலாவுக்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ் மகன்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று நேற்று விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிப்ரவரி முதல் வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் சசிகலா விரைவில் குணமடைய கனிமொழி எம்பி, பிரேமலதா விஜயகாந்த் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்று குறிப்பிட்டு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

sasikala

ஒபிஎஸ் மகனின் வாழ்த்து குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெங்களூரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனி வரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்றும் என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் உள்ள அனைவரும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் துணை முதல்வரின் மகன் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

sasikala

From around the web