இனி தமிழிலும் எஞ்சினியரிங் படிக்கலாம்!

 
engineering

தமிழில் என்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தாய்மொழியில் படித்தால் மட்டுமே பாடங்களை தெளிவாக புரிந்து படிக்க முடியும் என்றும் அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் பாடங்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல மாநிலங்களில் தமிழகத்தை போலவே வலியுறுத்தப்பட்டது

இந்த நிலையில் தற்போது தமிழ் உள்பட ஏழு மொழிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரியில் பாடங்கள் படிக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இனி தமிழ் மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழிலேயே படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பிராந்திய மொழியில் படிப்பவர்கள் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே பணி செய்ய முடியும் என்ற நிலை ஏற்படும் என்றும் ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே தேசிய அளவில், உலக அளவில் அவர்கள் பணிபுரிய வசதியாக இருக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

engineering

ஆனால் அதே நேரத்தில் தமிழில் நன்றாக புரிந்து படித்து விட்டு அதன் பிறகு ஆங்கிலத்தில் அதை நாம் பழகிக் கொள்ளலாம் என்றும் இதனால் தமிழில் படித்தாலும், தேசிய அளவிலும் உலக அளவிலும் முன்னேற முடியும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web