அதிமுக கொடியை காரிலிருந்து அகற்ற சசிகலாவுக்கு நோட்டீஸ்!

 

பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் சசிகலாவின் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற நோட்டீஸ் வழங்க காவல்துறையினர் தயார் நிலையில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்றுமுன்னர் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் இருந்து சசிகலா சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் தனது காரில் அதிமுக கொடியுடன் வந்து கொண்டிருப்பதால் அந்த கொடியை காரில் இருந்து அகற்ற வேண்டுமென சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்க தமிழக எல்லையில் காவல் துறை தயார் நிலையில் உள்ளனர்/

sasikala

சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவருடைய காருக்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் ஏற்கனவே காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறி சசிகலா தனது காரில் அதிமுகவுடன் வந்து கொடியுடன் வந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடன் கூடிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திமுக கொடியை காரில் இருந்து அகற்ற சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web