காய்கறி மட்டுமல்ல, போன் செய்தால் மளிகை பொருட்களும் வீடுதேடி வரும்!

 
grocery

காய்கறி மட்டுமின்றி மளிகை பொருட்களும் போன் செய்தால் வீடு தேடி வரும் என்றும் எனவே இன்று ஒரே நாளில் மொத்தமாக வாங்கி குவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது 

நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகள் உள்பட ஒரு சில கடைகள் தவிர எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை. குறிப்பாக காய்கறி கடைகள் மளிகை கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 

vegetables

இதனை அடுத்து நேற்றும் இன்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் வாங்கிக் குவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. முழு ஊரடங்கு உத்தரவு என்றாலும் நாளை முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் காய்கறி பழங்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் மூலம் 3 மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. நகராட்சி மாநகராட்சியின் அனுமதி பெற்றவர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை பழங்கள் காய்கறிகளை வியாபாரம் செய்வார்கள்

காய்கறிகள் மட்டுமின்றி மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் உள்ள வாடிக்கையாளர்கள் தொலைபேசி வழியாக மளிகை பொருட்களை கோரினால் கடை பணியாளர்கள் மூலமாக நேரடியாக வீட்டிற்கு சென்று காலை 6 மணி முதல் 12 மணி வரை விநியோகம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web