200ல் ஒன்றுகூட குறைய கூடாது: திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முக ஸ்டாலின்!

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் தொடர் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் முக ஸ்டாலின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே ஆவேசமாக பேசினார் 

வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற வேண்டும் என்றும் மிஷன் 200 என வைத்துக் கொள்வோம் என்றும் ஸ்டாலின் கூறினார். 200 தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட குறையக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் 

mk stalin

மேலும் மக்களிடம் சலித்து கொள்ளாதீர்கள் என்றும் மக்கள் கூறும் விஷயங்களை காதுகொடுத்து பொறுமையாக கேளுங்கள் என்றும் அவர் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுரை கூறியுள்ளார் மேலும் நாம் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம் என்றும் இந்தக் கூட்டத்தில் இருப்பவர்களிடம் தான் 234 தொகுதியிலும் இருக்கிறது என்றும் அண்ணா கருணாநிதி ஆகிய இரண்டு மிகப்பெரிய பலம்கள் நமக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் நம்முடைய முக்கிய டார்கெட் கிராம மக்களாக இருக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் சொல்லும் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு அவர்களுக்கு சாலை வசதி மருத்துவ வசதி ரேஷன் கடைகள் இருக்கிறதா என்பதை கிராம மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற வேண்டியது முதலில் இந்த கோரிக்கைகள் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web