விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை: அடுத்தது வெயில்தான்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்குப் பருவமழை விடைபெறும் என்றும் அடுத்த மாதம் முதல் கடுமையான வெயிலை சந்திக்க பொதுமக்கள் தயாராக வேண்டும் என்ரும் கூறப்படுகிறது காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,நாகை,விழுப்புரம் மற்றும் அரியலூரில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தற்போது பெய்யும் மழைக்கும் வடகிழக்கு பருவமழைக்கும் சம்பந்தமில்லை. எனவே வட கிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில்
 
விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை: அடுத்தது வெயில்தான்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்குப் பருவமழை விடைபெறும் என்றும் அடுத்த மாதம் முதல் கடுமையான வெயிலை சந்திக்க பொதுமக்கள் தயாராக வேண்டும் என்ரும் கூறப்படுகிறது

காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,நாகை,விழுப்புரம் மற்றும் அரியலூரில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தற்போது பெய்யும் மழைக்கும் வடகிழக்கு பருவமழைக்கும் சம்பந்தமில்லை. எனவே வட கிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் நிறைவு பெற உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தபோதிலும் சென்னைக்கு குடிநீர் தரும் நீர் ஆதாரங்களான ஏரிகள் முழுமையான அளவில் நிரம்பவில்லை என்பதால் கோடையின் இறுதியில் பொதுமக்கள் தண்ணீர் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது

From around the web