ஆகஸ்ட் 30 முதல் சுங்கவரி கட்டணம் இல்லை: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

 
toll gate

ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள 4 சுஙகச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்ககப்படாது என அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சட்டமன்றத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார் 

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் சுங்கவரி வசூல் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ள காரணத்தினால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, மேடவாக்கம், துரைப்பாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் கூட இன்று சட்டசபையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web