கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: ராமதாஸ் பிடிவாததால் அதிமுக அதிர்ச்சி

 

20 சதவீத இடங்கள் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை நிறைவேறும் வரை அதிமுக கூட்டணியில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் உறுதிபட கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவதை உறுதி செய்வதற்காக இன்று அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் டாக்டர் ராம்தாஸ் அவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து கருத்து கூறிய டாக்டர் ராமதாஸ் அவர்கள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி ஆகியோர்களுடன் வன்னியர் இடப் பங்கீடு குறித்து மட்டும்தான் பேசப்பட்டது என்றும் அரசியலோ அல்லது தேர்தல் குறித்து பேசவில்லை என்றும் கூறினார்

ramdoss

மேலும் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று அவர் உறுதிபட கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று சமீபத்தில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது என்பதும் அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றி அந்த கட்சியை அதிமுக இணைத்துக்கொள்ளுமா? அல்லது பாமகவை கூட்டணியில் இருந்து கழட்டி விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web