சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

 
சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள நாட்களிலாவது பொதுமக்கள் கடற்கரை வந்து சென்று கொண்டிருந்த நிலையில் இன்றும் நாளையும் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது

marina

 
இன்று தெலுங்கு வருட பிறப்பு மற்றும் நாளை தமிழ் வருட பிறப்பு என்பதால் இரண்டு நாட்கள் விடுமுறை நாளில் அதிக அளவு சென்னை மெரினா கடற்கரையில் பொது மக்கள் கூடுவார்கள் என்றும் இதனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்ததை அடுத்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது 

எனினும் நாளை மறுநாள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சென்னை மெரினா உள்பட அனைத்து கடற்கரையிலும் பொதுமக்கள் வரலாம் என்றும் சனி ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் வரலாம் என்றும் கூறப்படுகிறது

From around the web