ஒருசில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைப்பா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

 

திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட ஒரு சில தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறாது என்றும் அந்த தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ரத்து மற்றும் தேர்தல் ஒத்திவைப்பு என்று பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நாளை தமிழகத்தில் திட்டமிட்டபடி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும். தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார் 

election

எனவே நாளை 234 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

From around the web