சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதி இல்லை: தமிழக அரசு

 
marina

சென்னை மெரினாவில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத அளவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

சென்னை மக்களுக்கு இருக்கும் ஒரே இலவச பொழுதுபோக்கு இடம் சென்னை மெரினா என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த பல மாதங்களாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெரினாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறிப்பாக சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதை அடுத்து பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் மெரினாவை மூட வேண்டிய நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எச்சரித்துள்ளார் 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மெரீனா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும், அதேபோல் மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

From around the web