பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது: முக ஸ்டாலின் அறிக்கை

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூவர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிமுக நபரை கட்சியிலிருந்து நீக்கம் நடவடிக்கையும் அதிமுக தலைமையால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

mk stalin

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளியை கூட தப்பிக்க விடக்கூடாது. கொடூரத்திற்கு காரணமானவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். அண்ணா அடிக்காதீங்க அண்ணா என்று கதறிய குரல் இன்னமும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இதயத்தை கிழிக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு காரணமான குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்படவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை எடப்பாடி அரசு சீரழித்து விட்டது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பின்னணியில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதை தொடக்கத்திலிருந்தே திமுக கூறி வந்தது. ஆனால் குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு முயன்றது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினர் உள்பட ஒருவர்கூட தப்பித்து விடக்கூடாது என்று திமுக தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

From around the web