எந்த தேசிய கட்சியும் அதிமுகவுக்கு தேவையில்லை: கேபி முனுசாமி

 

எந்த தேசிய கட்சிகளும் அதிமுகவுக்கு தேவையில்லை என அதிமுக கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் தான் அதிமுக உள்ளது என்றும் பாஜகவின் தலைவர்கள் சொல்வதைத்தான் அதிமுக தலைவர்கள் நிறைவேற்றி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம் என்றும் இதை அரசியல் கண்காணிகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அதிமுக கூட்டத்தில் கேபி முனுசாமி அவர்கள் பேசியுள்ளார் 

kp munusamy

மேலும் ஜெயலலிதா கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என்று சிலர் நினைக்கின்றனர் என்றும் எந்த தேசிய கட்சிகளும் தமிழகத்தில் உள்ளே வரமுடியாது என்றும் அவர் பேசியுள்ளார்

மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் எந்த தேசிய கட்சியும் தங்கள் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி என்று பேசி வந்தால் அந்த கட்சி அதிமுகவுக்கு தேவையில்லை என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் அறிவிக்கும் என்றும், பாஜக தலைமையில்தான் கூட்டணி என்றும் பாஜக தமிழக தலைவர் கூறிவரும் நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பாஜகவுக்கு எதிராக ஒரு கருத்தை ஆவேசமாக பேசி உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web