வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு இல்லை: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

 
வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு இல்லை: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் வரும் 29ம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தடைபடுமா என்ற அச்சம் இருந்தது 

election

இந்த நிலையில் சற்று முன் தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவிக்கையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ஆம் தேதி ஊரடங்கு கிடையாது என்றும் வாக்கு எண்ணிக்கை தங்குதடையின்றி வழக்கம்போல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கையை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்காணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் வெற்றி பெறும் கட்சியினர் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web