ஒன்பது தொகுதிகள் மட்டுமே? காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த திமுக

 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று பரவலாக தகவல்கள் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வரும் சட்டமன்ற தொகுதிகளில் அதிக தொகுதிகளில் அதாவது சுமார் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

இதனால் கூட்டணி கட்சிகள் தாங்கள் கொடுக்கும் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்றும் அதற்கு சம்மதம் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து கழட்டி விடவும் திமுக தயாராக இருப்பதாக தெரிகிறது 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை குறைவான தொகுதிகள் அதாவது அதிகபட்சம் 9 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது

அதேபோல் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது 

எனவே இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக, தேமுக ஆகிய கட்சிகளும் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இவ்வாறு இரண்டு கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள் ஒட்டுமொத்தமாக மூன்றாவது அணியை அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web