புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை!

 

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த எந்த கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற கூடாது என சென்னை காவல்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கேளிக்கை கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடற்கரைச் சாலை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்கும் என்பது தெரிந்ததே 

new year

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளை நாளை இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது 

அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும் என்றும் நட்சத்திர ஓட்டல்கள் கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் என்பது வாய்ப்பில்லை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது

From around the web