புதிய இணையதளம்: இனி நேரடியாக முதல்வருக்கே புகார் அளிக்கலாம்!

 
stalin

தமிழக முதலமைச்சருக்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை  தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கோவிட் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு புகார் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அந்த இணையதளத்தில் பொதுமக்கள் முதல் அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

cmcell.tn.gov.in என்ற இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார்களை அனுப்பலாம் என்றும் தாங்கள் அனுப்பிய புகாருக்கு என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் எனவே தங்களுடைய புகாருக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா காலத்தில் மட்டுமன்று இந்த இந்த இணையதளம் எப்பொழுதும் இயங்கும் என்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

From around the web