உருவானது புதிய புயல்: தமிழகத்திற்கு கனமழை!

 
rain

வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும், வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த காற்றழுத்த தாழ்வால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

From around the web